சென்னை: உடல்நலப் பராமரிப்பு, ஆப்ஷோர் மெடிக்கல் பில்லிங், கோடிங் மற்றும் வருமான சுழற்சி மேலாண்மை ஆகிய துறைகளில் செயல்படும் ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம், தமிழ்நாட்டில் செயல்படும் அதன் ஐந்து இடங்களில் 1,500 பணியிடங்களை நியமிக்க உள்ளது.
பெரும்பான்மையான தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், யு.எஸ்., ஹெல்த்கேர் துறையில் வளர்ந்து வரும் புதிய வர்த்தக வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களின் எண்ணிக்கையை விரிவாக்கியுள்ளது. வரும் ஆண்டில் திருச்சியில் 700, பெங்களூரில் 600, மற்றும் பிலிப்பைன்ஸ்சில் 200 பணியாளர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சென்னையில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் நடைபெற்ற விழாவில், 2016ம் ஆண்டிற்கான சிறந்த தொழில்முனைவோர் விருதை ஒமேகா ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி கோபி நடராஜன் பெற்றார். சுகாதார துறையில், பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், சிறிய நகரங்களிலும் சிறப்பாய் பணியாற்றியதற்காகவும், பல இளம் தொழில் முனைவோர்க்கு உத்வேகமாக இருப்பதால் இந்த விருதை வழங்கி சி.ஐ.ஐ., அங்கீகரித்தது.
ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை கணிசமாக அதிகரித்து, கணினி உதவியுடனான மருத்துவ கோடிங்கை அறிமுகம் செய்துள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் எளிதில் சேவைகளை பெற முடியும்.
தற்போது 100 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஒமேகா நிறுவனம், அடுத்த ஆண்டில் வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சந்தையில் வர்த்தக வாய்ப்புகளை விரிவாக்க முடிவு செய்துள்ளது.
Read More